என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முல்லைபெரியாறு அணை"
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
- மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து நேற்றுமாலை 140 அடியை எட்டியது. இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறையினர் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினர்.
இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து ஆகிய பகுதிகளில் உள்ள பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 1817 கனஅடி நீர்வருகிறது. நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் வகையில் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்இருப்பு 7221 மி.கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 141 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன்பிறகு உபரிநீர் 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு திறக்கப்படும்.
முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குபிறகு இதுவரை 5 முறை அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இன்றுகாலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக 800 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றுகாலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 69.59அடியாக உள்ளது. நீர்வரத்து 1961 கனஅடி, தண்ணீர் திறப்பு 2599 கனஅடி, நீர்இருப்பு 5724 மி.கனஅடி.
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரியாறு 3, தேக்கடி 8.4, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.4, சண்முகா நதிஅணை 4, மஞ்சளாறு 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வீரபாண்டி 4, மி.மீ மழைளவு பதிவாகி உள்ளது.
- தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது.
- நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப் படுகிறது.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி 14707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த வாரம் திடீரென பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 120 அடியை கடந்தது.
இதனால் அணை யிலிருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்ப ட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.35 அடியாக உள்ளது. அணைக்கு 680 கனஅடிநீர் வருகிறது. நேற்று முன்தினம் 1200 கனஅடிநீர் திறக்க ப்பட்ட நிலையில் நேற்று 1127 அடியாக குறைக்க ப்பட்டது. இன்றுகாலை தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 600 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 51.08 அடியாக உள்ளது. 858 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 89.97 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது.
- 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத தால் முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை யின்போது 142 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் 2-ம் போக பாசனம் முழுமைக்கும் தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 120 அடியை கடந்தது. இன்று காலை நிலவரப்படி 121.55 அடி நீர்மட்டம் உள்ளது. மழை நின்றதால் அணைக்கு நீர்மட்டம் 740 கனஅடியாக சரிந்துள்ளது. நேற்று 1200 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 1127 கனஅடியாக குறைக்க ப்பட்டது.
பெரியாறு அணையிலி ருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 50.59 அடியாக உயர்ந்துள்ளது. 962 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 53.70 அடி யாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது.
- தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது.
கூடலூர்:
கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. இதனால் முதல்போக நெல்சாகுபடிக்கு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா என கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் எதிர்பார்த்தி ருந்தனர்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து 301 கனஅடியில் இருந்து 614 கனஅடியாக உயர்ந்தது. நீர்மட்டமும் 119.75 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 49.74 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.26 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 22, தேக்கடி 15.4, கூடலூர் 2.4, சண்முகா நதி அணை 2 மி.மீ மழை யளவு பதிவாகி உள்ளது.
- தமிழக பொறியாளர் குழுவினர் சுரங்கப்பாதை வழியாக சென்று பலவீனமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்தனர்.
- தமிழக நீர்வளத்துறையினர் பராமரிப்பு பணிகள் செய்ய கேரள அரசு எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்க ப்படும் சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணி மேற்ெகா ள்ள முடிவு செய்யப்பட்டது. ஷட்டர் பகுதி தேக்கடி வனத்துறை சோதனை ச்சாவடி அருகே உள்ளது. அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக குமுளி மலைப்பா தையை ஒட்டியுள்ள போர்பே அணையில் இருந்து வெளியேறும். அந்த தண்ணீர் ராட்சத குழாய் மூலம் திறக்கப்பட்டு மின்உற்பத்தி செய்தபின் லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் கலக்கும்.
தற்போது அணையிலி ருந்து 100 கனஅடிநீர் மட்டுமே திறந்துவிடப்படு கிறது. இந்தநிலையில் தமிழக பொறியாளர் குழுவினர் சுரங்கப்பாதை வழியாக சென்று பலவீனமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வ தற்காக ஆய்வு செய்தனர். பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இ ர்வின், உதவிபொறியா ளர்கள் ராஜகோபால், நவீன்குமார், அபிநயா, வாசுதேவன், மின்வாரிய உதவிசெயற்பொறி யாளர்கள் கருணாகரன், ரெஜி, உதவிபொறியாளர் தினேஷ் உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர். முல்லை பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறையினர் பராமரிப்பு பணிகள் செய்ய கேரள அரசு எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 100 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. வைகைஅணையின் நீர்மட்டம் 54.17 அடியாக உள்ளது. 49 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 60.18 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- கோடை காலம் தொடங்கியது முதல் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் நீர்மட்டம் குறைந்துகொண்டே வந்தது.
- இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
கோடைகாலம் தொடங்கியது முதல் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் நீர்மட்டம் குறைந்துகொண்டே வந்தது. இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.17 அடியாக உள்ளது. 49 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 60.35 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- மத்திய கண்காணிப்புக்குழு தலைவர் விஜய்சரண் தலைமையில் குழுவினர் நாளை அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
- பேபி அணையில் உள்ள 13 மரங்களை அகற்றி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. அணையின் உறுதி தன்மை குறித்து கேரள அரசு மற்றும் சில அமைப்பினர் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய கண்காணிப்புக்குழு தலைவர் விஜய்சரண் தலைமையில் குழுவினர் நாளை அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் அங்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர். இந்த குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம், கேரள அரசு சார்பில் நீர்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலர் ஜோஸ், நீர்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ்வர்க்கீஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு மேமாதம் 9-ந்தேதி அணைப்பகுதியில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் நாளை ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் பராமரிப்பு பணிகளுக்காக தளவாட பொருட்கள் கொண்டு செல்ல வல்லக்கடவில் இருந்து அணைக்கு வரும் வனப்பாதையை சீரமைக்க வேண்டும். பேபி அணையில் உள்ள 13 மரங்களை அகற்றி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தளவாட பொருட்கள் கொண்டு செல்ல தடைவிதிக்ககூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தும் தொடர்ந்து கேரள வனத்துறை பிரச்சினை செய்து வருகின்றனர்.
எனவே நாளை ஆய்வின்போது தமிழக அதிகாரிகள் இதுகுறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைக்குமா என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
- நவம்பர் 20-ந்தேதி வரை 140 அடியும், அதற்குமேல் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
- 142 அடிவரை நீர்மட்டம் உயர்வதற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நவம்பர் 20-ந்தேதி வரை 140 அடியும், அதற்குமேல் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தற்போது மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் 142 அடிவரை நீர்மட்டம் உயர்வதற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 667 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 511 கனஅடியாக இருந்தது.
அணையின் நீர்மட்டம் 138.20 அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் 142 அடியை மீண்டும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு 1257 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 132 கனஅடிநீர் வருகிறது. இதில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 92 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 64 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- தொடர் மழையால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது.
- அணைக்கு 11,174 கனஅடிநீர் வருகிறது. இதில் தமிழக பகுதிக்கு 2194 கனஅடிநீரும், கேரள பகுதிக்கு 8980 கனஅடிநீரும் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 139 அடியை கடந்துள்ளது. பருவமழை தீவிரமடைந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் ரூல்கர்வ் விதிமுறைப்படி தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்க முடியாது. இதனால் அணைக்கு வரும் நீர் கேரள பகுதிக்கு வீணாக திறந்துவிடப்படுகிறது. இது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் மழையால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 139.10 அடியாக உள்ளது. அணைக்கு 11,174 கனஅடிநீர் வருகிறது. இதில் தமிழக பகுதிக்கு 2194 கனஅடிநீரும், கேரள பகுதிக்கு 8980 கனஅடிநீரும் திறக்கப்படுகிறது.
அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மதுரை பெரியாறு-வைகை வடிநிலகோட்ட பருவநிலை ஆய்வு கண்காணிப்பு பொறியாளர் கிறிஸ்துநேசகுமார் தலைமையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக பேபி அணை, கேலரி உபநீர் வழிந்தோடி மதகுகள், டிஜிட்டல் நீர்நிலைப்பதிவு, மதகுகள் இயக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதில் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், பெரியாறு-வைகை கோட்ட செயற்பொறியாளர் அன்புச்செல்வன், உதவி செயற்பொறியாளர் குமார், மயில்வாகனன், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், முரளிதரன், நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 69.32 அடியாக உள்ளது. 2701 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 3969 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 46 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 84 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் குடிநீருக்காகவும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.
உத்தமபாளையம் 2.3, கூடலூர் 2.5, தேக்கடி 5.4, பெரியாறு 28.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- முல்லைபெரியாறு அணையில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவி பொருத்தவேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடப்பட்டு வந்தது.
- அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவியும், நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆக்ஸிலரோகிராப் கருவிகள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய நீர்வள ஆணையமுதன்ைம பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையில் மூவர்குழு உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது.
மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் ஹரிகுமார், உதவிபொறியாளர் பிரசீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் சமயங்களில் இக்குழு ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை மூவர் குழுவுக்கு அனுப்பி வைக்கும். அதன்படி கடந்த பிப்ரவரி 25-ந்தேதி அணையில் நீர்மட்டம் 129.50 அடியாக இருந்தபோது துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது.
தற்போது அணையின் நீர்மட்டம் 135.90 அடியாக உயர்ந்துள்ள நிலையில் மத்திய துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குபின் குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முல்லைபெரியாறு அணையில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவி பொருத்தவேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடப்பட்டு வந்தது. இந்நிலையில் துணைக்குழு ஆய்வுகூட்டத்தில் அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்ேமாகிராப் கருவியும், நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆக்ஸிலரோகிராப் கருவிகள் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகளிடம் துணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
இதன்மூலம் பல ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து திரும்பும்போது மத்திய துணைக்குழுவிடம் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
இதில் ரூல்கர்வ் முறையை கைவிடவேண்டும், அணையை பலப்படுத்தி 152 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். காலியாக உள்ள தமிழக பொறியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பராமரிப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்தனர்.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் காலை நிலவரப்படி 135.75 அடியாக உள்ளது. வரத்து 1448 கனஅடி, திறப்பு 1885 கனஅடி, இருப்பு 6055 மி.கனஅடி.
வைகை அணை நீர்மட்டம் 58.50 அடி, வரத்து 1813 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 3324 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.35 அடி, வரத்து 10 கனஅடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 70.35 அடி, வரத்து 11 கனஅடி, திறப்பு 3 கனஅடி.
- முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக்கொண்டு 14707 ஏக்கர் இருபோக நெல்விவசாயம் செய்யப்படுகிறது.
- கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
கூடலூர்:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையிலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக்கொண்டு 14707 ஏக்கர் இருபோக நெல்விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 1-ந்தேதி பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் விவசாய பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
ஆரம்பத்தில் 200 கனஅடி திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 400 கனஅடியாக பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டது. தற்போது முல்லைபெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு 500 கனஅடியும், தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கனஅடியும் என 600 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 130.15 அடியாக உள்ளது. வரத்து 342 கனஅடி, நீர் இருப்பு 4732 மி.கனஅடி. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
வைகை அணை நீர்மட்டம் 55.61 அடியாக உள்ளது. வரத்து 232 கனஅடி, திறப்பு 869 கனஅடி, நீர் இருப்பு 2818 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 46.60 அடி, வரத்து 74 கனஅடி, இருப்பு 280.69 மி.கனஅடி.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 84.62அடி, வரத்து 15 கனஅடி, திறப்பு 6 கனஅடி, இருப்பு 435.58 மி.கனஅடி.
பெரியாறு 7.2, தேக்கடி 6.4, உத்தமபாளையம் 0.8, ஆண்டிபட்டி 2.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் கேரள எல்லைப்பகுதியில் முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் தேனி, மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
அணையின் உறுதித்தன்மையை அறிய கசிவு நீர் அளவு கணக்கிடப்படுகிறது. கசிவுநீர் ஒழுகும்பாதையில் வீனோட்ஜ் கருவியை கொண்டு மிகத்துல்லியமாக அணையின் உறுதித்தன்மையை கணக்கிடப்படுகிறது. நீர்மட்டம் மற்றும் நீர்கசிவைப்பொறுத்து மாறும் இந்த அளவை பெரியாறு அணையின் பெரியாறு கேலரி பகுதியில் 4 வீனோட்ஜ் கருவிகள் உள்ளன.
கடந்த ஆண்டு துணைக்குழு கூட்டத்தில் கேலரி பகுதியில் புதிதாக 9 இடங்களில் வீனோட்ஜ் கருவி பொருத்தவேண்டும் என கேரள பிரதிநிதிகள் துணை கண்காணிப்பு குழுவினரிடம் வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கைப்படி கடந்த டிசம்பர் மாதம் 9 புதிய வீனோட்ஜ் கருவிகள் கசிவுநீர் பாதையில் பொருத்தப்பட்டது.
தற்போது அணையை துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டம் 118 அடியாக உள்ளது. எனவே கசிவு நீர்பாதையில் ஆய்வு செய்தபோது துல்லியமாக நிமிடத்திற்கு 38 லிட்டர் கசிவுநீர் வெளியேறுவது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழக அதிகாரிகள் தெரிவிக்கையில், கேரளாவின் ஒவ்வொரு சோதனையிலும் முல்லைபெரியாறு அணை பலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நடந்த ஆய்வின்போதும் அது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது என்றனர். #Mullaperiyar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்